×

டெல்லி வன்முறைக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்.. சலசலப்பை ஏற்படுத்தும் ’காலிஸ்தான்’

டெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி போராட்டம் வன்முறை போராட்டமாக மாறியது. ஒருதரப்பினர் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து செங்கோட்டையில் உள்ள தேசிய கொடியை அகற்றிவிட்டு இரண்டு கொடிகளை பறக்கவிட்டனர். அதில் ஒரு கொடி விவசாயிகளின் கொடி என்று பேசப்பட்டது. ஆனால், மற்றொரு கொடி காலிஸ்தான் கொடி என்ற சர்சை எழுந்தது. ஆனால், அது சீக்கிய மத கொடி என்றும் வலைத்தளங்களில் செய்திகள் வந்தன. இந்நிலையில், டெல்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள இந்திய
 

டெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி போராட்டம் வன்முறை போராட்டமாக மாறியது. ஒருதரப்பினர் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து செங்கோட்டையில் உள்ள தேசிய கொடியை அகற்றிவிட்டு இரண்டு கொடிகளை பறக்கவிட்டனர். அதில் ஒரு கொடி விவசாயிகளின் கொடி என்று பேசப்பட்டது. ஆனால், மற்றொரு கொடி காலிஸ்தான் கொடி என்ற சர்சை எழுந்தது. ஆனால், அது சீக்கிய மத கொடி என்றும் வலைத்தளங்களில் செய்திகள் வந்தன.

இந்நிலையில், டெல்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரே நின்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இங்கிலாந்து, அமெரிக்கா, கடனாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவிலுள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த காலிஸ்தான் இயக்கத்திற்கு பாகிஸ்தனின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவும், உதவியும் இருந்து வருகிறது.

இந்நிலையில் , டெல்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரே நின்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருப்பதும், அதன் வீடியோ வைரலாகி வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த முறையான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போராட்டம் வன்முறையாக மாறியதுதான் பெரும் சர்ச்சையினை எழுப்பி இருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ வைரலாவதும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.