×

2022 உலக பார்வை தின கருப்பொருள் - "உங்கள் கண்களை நேசியுங்கள்"

 

2022 ஆம் ஆண்டு உலக பார்வை தினத்திற்கான LoveYourEyes என்ற கருப்பொருளைத் தொடரும் என்று குருட்டுத்தன்மை தடுப்புக்கான சர்வதேச நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நம் உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கண் .இந்த கண் மூலமாகவே நம் உலகத்தை காண்கிறோம்.கண் நமக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக அமைந்துள்ளது. இந்த உலகத்தில் சுமார் 2.2 பில்லியன் மக்களுக்கு அருகில் அல்லது தொலைதூரத்தில் இருப்பது சரிவர தெரியாத வகையில் பார்வை குறைபாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உலக பார்வை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் வரும் இரண்டாவது வியாழக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக பார்வை தினம் அக்டோபர் 13ஆம் தேதி ஆன இன்று கடைபிடிக்கப்படுகிறது. பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வு நாளாக ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு இந்நாளை கடைப்பிடித்து வருகிறது.

2022 ஆம் ஆண்டு உலக பார்வை தினத்திற்கான LoveYourEyes என்ற கருப்பொருளைத் தொடரும் என்று குருட்டுத்தன்மை தடுப்புக்கான சர்வதேச நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது: 2022 உலக பார்வை தினத்திற்காக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வை சோதனைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘லவ் யுவர் ஐஸ்’ பிரச்சாரம் தனிநபர்கள் தங்கள் கண் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள ஊக்குவிக்கிறது மற்றும் பார்வை இழப்பு மற்றும் கண் பராமரிப்பு சேவைகளை அணுக முடியாத உலகெங்கிலும் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.  கடந்த ஆண்டு உலக பார்வை தினம் மற்றும் லவ் யுவர் ஐஸ் பிரச்சாரத்தின் வெற்றி இணையற்றது மற்றும் அனைவரும் ஒன்றிணைந்தால் என்ன சாதிக்க முடியும் என்ற உண்மையான சக்தியைக் காட்டியது. இந்த ஆண்டு, உலகப் பார்வை தினத்தை நம் அனைவருக்கும் LoveYourEyes-ஐ நினைவுபடுத்தும் வகையில், மேலும் பல வரலாற்றை உருவாக்கி வைப்போம். இந்தச் செய்தியை பரவலாகப் பரப்புவதற்கு கண் சுகாதாரத் துறை பொதுமக்களை பணியாற்ற அழைக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.