×

2 ஆஸ்கர் வென்ற நாயகி… 104 வயதில் மறைவு! – திரை உலகம் அஞ்சலி

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ஹாலிவுட் திரை உலகின் பழம் பெரும் நடிகை ஒலிவியா டி ஹேவிலேண்ட் நேற்று காலமானார் காலமானார். அவருக்கு வயது 104. 104 வயதான ஓலிவியா டி ஹேவிலேண்டுக்கு வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நேற்று (ஜூலை 26ம் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள தன்னுடைய வீட்டில் அவர் காலமானார். 1946 மற்றும் 1949ம் ஆண்டுகளில் வெளி வந்த டு ஈச் ஹிஸ் ஒன் மற்றும் த ஹேர்ரஸ் ஆகிய
 

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ஹாலிவுட் திரை உலகின் பழம் பெரும் நடிகை ஒலிவியா டி ஹேவிலேண்ட் நேற்று காலமானார் காலமானார். அவருக்கு வயது 104.


104 வயதான ஓலிவியா டி ஹேவிலேண்டுக்கு வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நேற்று (ஜூலை 26ம் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள தன்னுடைய வீட்டில் அவர் காலமானார்.
1946 மற்றும் 1949ம் ஆண்டுகளில் வெளி வந்த டு ஈச் ஹிஸ் ஒன் மற்றும் த ஹேர்ரஸ் ஆகிய படங்களில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.


அமெரிக்க பெற்றோருக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிறந்த ஹேவிலேண்ட் பின்னர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு குடியேறினார். 1930ம் ஆண்டில் அவர் நடிக்க வந்தார். 1935ம் ஆண்டு வெளியான நாயகியாக அவர் அறிமுகம் ஆனார். ஷேக்ஸ்பியரின் மிட் சம்மர் நைட்ஸ் ஸ்ட்ரீம் என்ற நாடகத்தைத் தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. 1939ம் ஆண்டு வெளியான கோன் வித் தி விண்ட் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார். 1953ம் ஆண்டு அவர் பாரீஸ் நகரில்

குடியேறினார். அதன் பிறகு பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் இருந்தார். 2003ம் ஆண்டு நடந்த 75வது அக்காடமி அவார்ட்ஸில் அவர் பங்கேற்றார். இவருக்கு பெஞ்சமின், குட்ரிச் என்ற இரண்டு மகன்களும் ஜிஸ்லி என்ற மகளும் உள்ளனர். மறைந்த ஒலிவியாடி ஹேவிலேண்டுக்கு பாலிவுட் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.