×

19 பேர் பலி – சீனாவில் திடீர் தீ விபத்து

சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 19 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 19 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் உள்ள நிங்காய் கவுண்டி எனும் நகருக்கு அருகில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள்
 

சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 19 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 19 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் உள்ள நிங்காய் கவுண்டி எனும் நகருக்கு அருகில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில் முறையான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. ஆதலால், அவ்வப்போது பாதுகாப்பு வசதியை மேம்படுத்துவதற்காக அங்குள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து மேலிடத்தில் புகார் அளித்து வந்தனர். இருப்பினும் தொழிற்சாலை நிர்வாகம் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போலவே இயங்கி வந்தது.

இந்நிலையில், தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பரவியது இதனால் இன்னும் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டு தவித்தனர். இந்த தீ விபத்து சம்பவம் அறிந்து தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளே சிக்கிக் கொண்ட சிலரை மீட்டனர். மேலும் உடல் கருகி உயிர் இழந்த சிலரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இந்த தீ விபத்தில் சுமார் 19 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். 

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய பாதுகாப்பு வசதி குறைபாடு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 

சீனாவில் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் முறையான பாதுகாப்பு வசதி இல்லாததனால் அவ்வபோது தீ விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.