×

மியான்மரில் பதற்றம்: இரும்புக்கரம் கொண்டு அடக்கும் ராணுவம் – 18 பேர் பலி!

தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் காரணம் காட்டி மியான்மர் ராணுவம் ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து சர்வாதிகாரத்தை அரங்கேற்றியது. உடனே ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட தலைவர்களை அதிரடியாகக் கைதும் செய்தது. இவ்விவகாரம் உலகளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமெரிக்கா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து ஐநா சபையில் முறையிட்டன. இரு நாடுகளும் மியான்மருக்குப் பொருளாதார தடைவிதித்து நடவடிக்கை எடுத்தனர். உலகமே எதிர்த்தும் ராணுவம் தன்னுடைய அராஜகப் போக்கைக் கைவிடவில்லை. இதனிடையே
 

தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் காரணம் காட்டி மியான்மர் ராணுவம் ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து சர்வாதிகாரத்தை அரங்கேற்றியது. உடனே ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட தலைவர்களை அதிரடியாகக் கைதும் செய்தது. இவ்விவகாரம் உலகளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமெரிக்கா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து ஐநா சபையில் முறையிட்டன. இரு நாடுகளும் மியான்மருக்குப் பொருளாதார தடைவிதித்து நடவடிக்கை எடுத்தனர். உலகமே எதிர்த்தும் ராணுவம் தன்னுடைய அராஜகப் போக்கைக் கைவிடவில்லை.

இதனிடையே ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்தும், ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் மியான்மர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை பாதுகாப்புப் படையினரை வைத்து அடக்கிவருகிறது. ஆனால் உலகளவில் கவனம் பெற்றுவருவதால், ராணுவம் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறது.

நேற்றைய போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது. யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன. இதனால் மியான்மரில் பதற்றநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.