×

இந்தியாவை நண்பராக கொண்டிருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது..நெகிழும் இஸ்ரேலியர்கள்

லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளால் நடந்த மும்பை அட்டாகின் 12வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உலகம் நாடுகள் பலவற்றிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. MumbaiTerrorAttack என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. 26.11.2020 அன்று நடந்த அந்த மும்பை அட்டாக்கில் பலியான 166 பேரில் 6 அமெரிக்களும் உயிரிழந்தனர். இதை முன்னிட்டு அமெரிக்க கேபிடல் முன்பு அமெரிக்கர்கள் நினைவஞ்சலி கூட்டம் நடத்தினர். அந்த மும்பை சம்பவம் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் காலே பிரவுன்,
 

லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளால் நடந்த மும்பை அட்டாகின் 12வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உலகம் நாடுகள் பலவற்றிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. MumbaiTerrorAttack என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

26.11.2020 அன்று நடந்த அந்த மும்பை அட்டாக்கில் பலியான 166 பேரில் 6 அமெரிக்களும் உயிரிழந்தனர். இதை முன்னிட்டு அமெரிக்க கேபிடல் முன்பு அமெரிக்கர்கள் நினைவஞ்சலி கூட்டம் நடத்தினர்.

அந்த மும்பை சம்பவம் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் காலே பிரவுன், ‘’6 அமெரிக்கர்கள் உள்பட உயிரிழந்த அனைவருக்கும் நீதியை உறுதி செய்ய அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்’’என்று தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமில் இஸ்ரேலியர்களும் இந்திய மாணவர்களும் மும்பை அட்டாக்கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அப்போது, பயங்கரவாதிகளுக்கு நிதியும், ஆயுதங்களும் வழங்கு நாடுகளை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது என்று தெரிவித்தவர்கள், பயங்கரவாத்தை ஆதரிக்கும் நாடுகளை புறக்கணிக்க அமைதியான நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்றும், இந்தியாவை போன்ற ஒரு அமைதியான நாட்டை நண்பராக கொண்டிருப்பது இஸ்ரேலியர்களான எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.