×

17 லட்சம் பேர் மரணம் – உலகளவில் கொரோனா நிலவரம்

டிசம்பர் 21-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 71 லட்சத்து 72 ஆயிரத்து 352 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 674 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 644 பேர். அதன்
 

டிசம்பர் 21-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 71 லட்சத்து 72 ஆயிரத்து 352 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 674 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 644 பேர். அதன் பின்னான அப்டேட் 497 பேர் அடுத்து மரணம் அடைந்துள்ளன. அவற்றையும் சேர்த்தால் 17 லட்சத்தைக் கடந்து விட்டது.  

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,13,83,034 பேர். இவர்களில் 99.5 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கும் 0.5 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 1,82,67,579 பேரும், இந்தியாவில் 1,00,56,248 பேரும், பிரேசில் நாட்டில் 72,38,600 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் அமெரிக்காவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 1,83,233 பேரும், பிரேசிலில் 25,445 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். இந்தியாவில் 24,589 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் இந்தியா, பிரேசில் நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகம்.