#BREAKING நேபாளத்தில் தாரா ஏர் விமான விபத்து - 14 உடல்கள் மீட்பு!!
Updated: May 30, 2022, 11:13 IST
நேபாளத்தில் தாரா ஏர் விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேபாளம் போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை தாரா ஏர் விமானம் புறப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் விமானம் காணாமல் போனது. விமானத்தில் இரண்டு ஜெர்மனியர்கள், 4 இந்தியர்கள் ,13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணியில் நேபாள ராணுவம் ஈடுப்பட்டது. இந்த சூழலில் முஸ்டங் மாகாணம் தசங் 2 என்ற பகுதியில் சனோஸ்வர் என்ற இடத்தில் மலைப்பகுதியில் மோதி விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் உறுதி செய்தது. இருப்பினும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி நேற்று நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீட்புப்பணியில் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.