×

உருகும் பனிப்பாறைகள்- கடலோர நகரங்களுக்கு நாசா எச்சரிக்கை !

அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகளால் கடலோர நகரங்கள் ஆபத்தில் உள்ளதாக நாசா எச்சரிக்கை செய்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் 60 பேர் கொண்ட குழு ஒன்று அண்டார்டிகாவில் ஆய்வு செய்து வந்தது. தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2100 ஆம் ஆண்டில் கடல் நீர் மட்டம் 15 அங்குலம் வரை உயரும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளனர். அந்த அறிக்கையில், அண்டார்டிகாவின் பனிப் பாறைகள் உருகுவதால், 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் 38 சென்டிமீட்டர் வரை உயரும்
 

அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகளால் கடலோர நகரங்கள் ஆபத்தில் உள்ளதாக நாசா எச்சரிக்கை செய்துள்ளது.

நாசா விஞ்ஞானிகள் 60 பேர் கொண்ட குழு ஒன்று அண்டார்டிகாவில் ஆய்வு செய்து வந்தது. தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2100 ஆம் ஆண்டில் கடல் நீர் மட்டம் 15 அங்குலம் வரை உயரும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில், அண்டார்டிகாவின் பனிப் பாறைகள் உருகுவதால், 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் 38 சென்டிமீட்டர் வரை உயரும் என கூறப்பட்டுள்ளது. புவி வெப்பம் அதிகரிப்பது தொடர்ந்தால், கடல் நீர் மட்டத்தின் உயரம் மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது.

நாசா ஆய்வு குறித்து அமெரிக்காவின் பஃபல்லொ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குறிப்பிடுகையில், வானிலையில் ஏற்படும் தாக்கம் காரணமாக பனிப்பாறைகளின் உருகி வருகின்றன. இந்த ஆய்வுபடி 2100 ஆம் ஆண்டில் பெரும்பாலான நகரங்களில் முக்கிய கட்டிடங்கள் நீருக்கு இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில், புவி வெப்பம் அதிகரிப்பு, குறைந்த அளவிலான புவி வெப்பம் வெளியேற்றம் என இரு வகைகளில் நடைபெற்றது. அதிக அளவில் வெப்ப வெளியேற்றம் நடந்தால் கடல்நீர் மட்டம் 9 செ. மீட்டர்களும், குறைந்த வெப்பம் வெளியேறினால் 3 செ.மீட்டர்களும் உயரலாம் தெரிய வந்துள்ளது.

வானிலை மாற்றம் காரணமாக , எதிர்பார்ப்புக்கு மேல் புவி வெப்பம் அதிகரித்தால் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்து 18 செ.மீட்டர் வரை கடல்நீர் மட்டம் உயரும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் மூலம், வரும் ஆண்டுகளில் புவி வெப்பமயமாதலில் எச்சரிக்கையாக இல்லையென்றால் நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளதை உலக நாடுகள் உணர வேண்டும் என நாசா எச்சரிக்கை செய்துள்ளது.