×

சாலமன் மீன் தோல்களில் உயர் ரக தோல் பொருட்கள்

ஐரோப்பிய நாடுகளின் விருப்ப மீன் உணவான , சாலமன் மீன் தோல்களில் இருந்து உயர் ரக தோல் பொருட்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது ஒரு நிறுவனம். பிரான்சை சேர்ந்த அந்த நிறுவனம் , சாலமன் மீன் தோல்களை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி இந்த தோல் பொருட்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக ஆண்டிற்கு சுமார் 10 டன் முதல் 12 டன் வரையில் சாலமன் மீன் தோல்களை சேகரிக்கிறார்களாம். ஒவ்வொரு துண்டு தோலையும் பதப்படுத்துகின்றனர். இந்த பணிக்காக சில வாரங்கள்
 

ஐரோப்பிய நாடுகளின் விருப்ப மீன் உணவான , சாலமன் மீன் தோல்களில் இருந்து உயர் ரக தோல் பொருட்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது ஒரு நிறுவனம்.

பிரான்சை சேர்ந்த அந்த நிறுவனம் , சாலமன் மீன் தோல்களை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி இந்த தோல் பொருட்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்காக ஆண்டிற்கு சுமார் 10 டன் முதல் 12 டன் வரையில் சாலமன் மீன் தோல்களை சேகரிக்கிறார்களாம்.

ஒவ்வொரு துண்டு தோலையும் பதப்படுத்துகின்றனர். இந்த பணிக்காக சில வாரங்கள் வரை நாட்கள் எடுத்துக் கொள்கிறதாம். ஆனால், அதன்பின்னர் மாட்டுத் தோலுக்கு இணையான, வலுவான தோல்கள் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், ‘மறு சுழற்சி என்பது நம் தலைமுறையினரின் கடமையாகும். நமது வளர்ச்சிக்கும், அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்வதற்கும் இதுவே தேவை. உலக வளங்களை மேலும் அழிப்பதைக் காட்டிலும் இது சிறந்த முறை என்று தெரிவித்துள்ளது. புதிய நிறுவனங்களும் இந்த முறைக்கு மாற வேண்டும் எனவும் அந்த நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.