×

கார்ட்டூன் கதாபாத்திரம் ‘பாப்பாய்’ போல ஆக நினைத்த ராணுவ வீரருக்கு.. நேர்ந்த சோகம்!

பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான பாப்பாய் போல தனது கைகளை பெரிதாக்கிக்கொள்ள ஆபரேஷன் செய்துகொண்ட ராணுவ வீரர் ஒருவர் மிகவும் அவதிக்கு உள்ளானதால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மற்றொரு ஆபரேஷன் செய்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களில் ஒன்று பாப்பாய். இதில் வரும் பாப்பாய் கதாபாத்திரத்தின் உடல் அமைப்பானது சற்று வித்தியாசமான அளவில் இருக்கும். பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான பாப்பாய் போல தனது கைகளை பெரிதாக்கிக்கொள்ள ஆபரேஷன் செய்துகொண்ட ராணுவ வீரர்
 

பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான பாப்பாய் போல தனது கைகளை பெரிதாக்கிக்கொள்ள ஆபரேஷன் செய்துகொண்ட ராணுவ வீரர் ஒருவர் மிகவும் அவதிக்கு உள்ளானதால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மற்றொரு ஆபரேஷன் செய்துள்ளார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களில் ஒன்று பாப்பாய். இதில் வரும் பாப்பாய் கதாபாத்திரத்தின் உடல் அமைப்பானது சற்று வித்தியாசமான அளவில் இருக்கும்.

பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான பாப்பாய் போல தனது கைகளை பெரிதாக்கிக்கொள்ள ஆபரேஷன் செய்துகொண்ட ராணுவ வீரர் ஒருவர் மிகவும் அவதிக்கு உள்ளானதால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மற்றொரு ஆபரேஷன் செய்துள்ளார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களில் ஒன்று பாப்பாய். இதில் வரும் பாப்பாய் கதாபாத்திரத்தின் உடல் அமைப்பானது சற்று வித்தியாசமான அளவில் இருக்கும்.

அதாவது உடல் மிகவும் மெலிந்தவாரும் இரு கை பகுதிகளும் உடலைவிட பெரிய அளவிலும் இருக்கும். இந்த உடல் அமைப்பு சற்று வித்தியாசமாக இருப்பதால் தான் இந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது . 

பாப்பாய் உடல் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தனது இரு கைகளையும் அதேபோல் பெரிதாக மாற்றிக்கொள்ள ஆபரேஷன் செய்து கொண்டார். அந்த ஆபரேஷனில் இருக்கைகளிலும் சுமார் ஒன்றரை கிலோ அளவிற்கான ஜெல்லி ராணுவ வீரரின் இரு கை பகுதியிலும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. 

இதனால் அவரது இரு கைகளும் வழக்கத்திற்கு மாறான மிகப் பெரிய அளவில் இருந்தது. சில வருடங்கள் இதேபோல இருந்ததால் உடலில் நரம்பு சார்ந்த மற்றும் தசை சார்ந்த பக்க விளைவுகள் ஏற்பட துவங்கின. இத்தகைய எடையை உடலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இதனால் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களிடம் ராணுவவீரர் ஆலோசனை பெற்றார். இவரது உடலமைப்பை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் உடலில் உள்ள செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கைகளில் செய்யப்பட்ட இந்த மாற்றத்தை உடலால் ஆரோக்கியமானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் உயிர் இழக்கும் அளவிற்கு செல்லக் கூடும் என தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மீண்டும் அவர் கைகளில் செலுத்தப்பட்ட ஜெல்லிகள் ஆபரேஷன் மூலம் நீக்கப்பட்டது. 

ஒரு சிலர் கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு அதேபோல் மாறுவதற்கான பல முயற்சிகளை எடுப்பதனால் உடல் அளவில் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இயற்கையான உடலமைப்பு வைத்துக்கொள்வதே ஆரோக்கியமானது என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. என்னைப்போன்று நீங்களும் தவறுகளை செய்ய வேண்டாம் என ராணுவ வீரர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.