×

“அறியாமல் எல்லையைத் தாண்டினாலும் ஆபத்து” கமல்ஹாசன் வேதனை

நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் சென்றனர். படகு கொச்சி கடற்பகுதிக்கு சுமார் 200 நாட்டிகல் மைல் தொலைவில் புயலில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 17 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் கரை திரும்பாதது பெரும் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படகு மற்றும் மீனவர்களை மீட்க கடற்படை மற்றும் கடலோர காவல்படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
 

நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் சென்றனர். படகு கொச்சி கடற்பகுதிக்கு சுமார் 200 நாட்டிகல் மைல் தொலைவில் புயலில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 17 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் கரை திரும்பாதது பெரும் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படகு மற்றும் மீனவர்களை மீட்க கடற்படை மற்றும் கடலோர காவல்படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறியாமல் எல்லையைத் தாண்டினாலும் ஆபத்து. பாதுகாப்பான பகுதிகளில் மீன் பிடித்தாலும் திடீர் புயல்களால் அபாயம் என்று மீனவர்களின் துயர அலைகள் ஓயாததாகவே உள்ளது. கேரளத்தின் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நம் நாகை மீனவர்கள் என்னவானார்கள் எனத் தெரியாத நிலையில் தேடப்பட்டுவருகிறார்கள். மீனவச் சகோதரர்களின் துயரம் தீரும் நாள் வரவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.