×

இலங்கைக்கு எப்போது கொரோனா தடுப்பூசி? – அதிகாரி தகவல்

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வருகிறது. சில நாடுகளில் பரவல் குறைந்தாலும், பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 148 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 70 லட்சத்து 23 ஆயிரத்து 742 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 50
 

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வருகிறது. சில நாடுகளில் பரவல் குறைந்தாலும், பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 148 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 70 லட்சத்து 23 ஆயிரத்து 742 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 267 பேர்.
தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,92,36,139 பேர்.

இலங்கையில் கொரோனா பாதிப்பு 28,580. இவர்களில் 20,804 பேர் குணமடைந்து விட்டனர். இறப்பு எண்ணிக்கை 142 பேர்.

இலங்கைக்குக் கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை அரசின் தலைமை தொற்றுநோய்த் துறை நிபுணர் மருத்துவர் சுதத் சமர வீர, “இலங்கைக்கு 2021 ஆம் ஆண்டின் மத்தியில்தான் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

அவர் சொல்வதுபோல, இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிக்கு அவ்வளவு காலம் எடுத்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், இதுவரை எந்த கொரோனா தடுப்பூசியையும் அவசரக்கால பயன்பாட்டுக்கு இலங்கை அனுமதிக்க வில்லை.