×

3 வருஷத்துல கடனை அடைக்கிறோம்… கடன் இல்லாத நிறுவனமாக மாறுகிறோம்…. டாடா மோட்டார்ஸ் தகவல்

முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2020 மார்ச் மாதத்துக்குள் கடன் இல்லாத நிறுவனமான மாறும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். முகேஷ் அம்பானி நிர்ணயித்த காலத்துக்கு முன்பே அந்நிறுவனத்தின் கடனை எல்லாம் அடைத்து கடன் இல்லாத நிறுவனமாக மாற்றி விட்டார். தற்போது அதே போன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அடுத்த 3 ஆண்டுகளில் கடன் இல்லாத நிறுவனமாக மாற உள்ளதாக தெரிவித்துள்ளது. மும்பையில் நேற்று
 

முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2020 மார்ச் மாதத்துக்குள் கடன் இல்லாத நிறுவனமான மாறும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். முகேஷ் அம்பானி நிர்ணயித்த காலத்துக்கு முன்பே அந்நிறுவனத்தின் கடனை எல்லாம் அடைத்து கடன் இல்லாத நிறுவனமாக மாற்றி விட்டார். தற்போது அதே போன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அடுத்த 3 ஆண்டுகளில் கடன் இல்லாத நிறுவனமாக மாற உள்ளதாக தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

மும்பையில் நேற்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் பேசுகையில் கூறியதாவது: டாடா மோட்டார்ஸ் நிறுவன குழுமத்தின் நிகர கடன் ரூ.48 ஆயிரம் கோடி கடன் உள்ளது, இதனை கணிசமாக குறைத்து வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் அதை பூஜ்ஜிய கடன் நிலைகளுக்கு கொண்டு வருவதே இலக்கு. இதனை நோக்கி நிறுவனம் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

என்.சந்திரசேகரன்

2021-22ம் நிதியாண்டுக்குள் நிறுவனத்தின் தாரள பணப்புழக்கத்தை நேர்மறையாக்குவதும் இதில் அடங்கும். டி.எம்.எல். குழுமம், பல்வேறு மையமற்ற வணிகங்களில் முதலீடு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 4.83 சதவீதம் அதிகரித்து ரூ.127.05ல் முடிவடைந்தது. நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்துவதில் ஆர்வம் காட்டுவது அந்த நிறுவனத்துக்கு மட்டுமல்ல வங்கி துறைக்கும் நல்லது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.