×

ரபேலில் இந்திய கருவூலத்திலிருந்து பணம் திருடப்பட்டது… மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் மத்திய, மாநில மற்றும் அரசு நிதி உதவியை பெறும் அமைப்புகளின் வரவு செலவு கணக்ககை சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின்கீழ் நிறுவப்பட்ட ஒர் அதிகார மையம் ஆகும். குடியரது தலைவர் மட்டுமே தலைமை கணக்கு தணிக்கையாளரை கட்டுப்படுத்த முடியும். அரசுகள் அவரை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அண்மையில் பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்களை தணிக்கை செய்து தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில்
 

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் மத்திய, மாநில மற்றும் அரசு நிதி உதவியை பெறும் அமைப்புகளின் வரவு செலவு கணக்ககை சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின்கீழ் நிறுவப்பட்ட ஒர் அதிகார மையம் ஆகும். குடியரது தலைவர் மட்டுமே தலைமை கணக்கு தணிக்கையாளரை கட்டுப்படுத்த முடியும். அரசுகள் அவரை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அண்மையில் பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்களை தணிக்கை செய்து தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

ராகுல் காந்தி

அதில் ரபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பான எந்தவொரு ஒப்பந்தங்களும் தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்தின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்ததாக முன்னணி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. அதனை மேற்கோள்காட்டி ரபேல் விமானம் பெயரில் இந்திய கருவூலத்திலிருந்து பணம் திருடப்பட்டது என மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர்

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், ரபேலில் இந்திய கருவூலத்திலிருந்து பணம் திருடப்பட்டது. உண்மை ஒன்று, பாதைகள் பல.மகாத்மா காந்தி என பதிவு செய்து செய்து இருந்தார். மேலும் அதனுடன் ரபேல் கொள்முதல் ஒப்பந்தங்களை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் தணிக்கை செய்யவில்லை என செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்த செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.