×

திருச்சியில் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : கடிதத்தை கைப்பற்றிய போலீசார்!

திருச்சியில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் காவல்துறையினர் இரவு பகலாக தொடர்ந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் மன உளைச்சல் காரணமாக அவர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதுடன், சிலர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் துறையில் மோப்ப நாய் பயிற்சியாளராக பணியாற்றிய காவலர் அழகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 

திருச்சியில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் காவல்துறையினர் இரவு பகலாக தொடர்ந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் மன உளைச்சல் காரணமாக அவர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதுடன், சிலர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் துறையில் மோப்ப நாய் பயிற்சியாளராக பணியாற்றிய காவலர் அழகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக காவலர் அழகர் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அழகரின் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் அழகர் தற்கொலை செய்துகொண்ட செய்தி சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.