×

ஜே.இ.இ., நீட் தேர்வு மையங்களுக்கு செல்ல மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம், தங்குமிடம்..ஒடிசா அரசு அறிவிப்பு

ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் தங்குமிடம் வசதி செய்து கொடுக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லைன என்பதால் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.இதனையடுத்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கூட்டு நுழைவு தேர்வு (ஜே.இ.இ.) (மெயின்)
 

ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் தங்குமிடம் வசதி செய்து கொடுக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லைன என்பதால் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
இதனையடுத்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கூட்டு நுழைவு தேர்வு (ஜே.இ.இ.) (மெயின்) தேர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் என அறிவித்தது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

இந்த சூழ்நிலையில் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் இது தொடர்பாக போனில் பேசினார். ஆனால் தேர்வுகளை ஒத்திவைப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. தேர்வு தொடங்க இன்னும் 48 மணி நேரமே உள்ளதால், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் பணியில் ஒடிசா களமிறங்கி விட்டது. ஒடிசாவின் பாதி பகுதியை வெள்ளம் பாதித்துள்ளதால் போக்குவரத்து இயங்கவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக இலவச பஸ் பயணத்தை அம்மாநில அறிவித்துள்ளது.

ஒடிசா அரசு பேருந்து

இது தொடர்பாக அம்மாநில தலைமை செயலாளர் ஆஷித் குமார் திரிபாதி கூறியதாவது: மாநிலத்தின் 7 நகரங்களில் 26 மையங்களில் ஜே.இ.இ. மெயின் தேர்வு எழுத மொத்தம் 37 ஆயிரம் பேர் வருவார்கள். தேர்வு மையம் அல்லது தங்குமிடத்தை அடையவதற்கு சொந்த போக்குவரத்து இல்லாத மாணவர்கள், அரசு போக்குவரத்து மற்றும் தங்குமிடத்தை பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டும். இலவச தங்குமிடம் தேவைப்படும் தேர்வு எழுதுபவர்களுக்கு, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் ஐ.டி.ஐ. கல்லூரிகளில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். தேர்வு எழுதுபவர்களை அவர்களது சொந்த ஊர்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு அரசு பேருந்துக்கள் அழைத்து செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.