×

நீட், ஜே.இ.இ. தேர்வுகள் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ல.. நடத்துவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்க கூடாது… பா.ஜ.க.

நீட்,ஜே.இ.இ. தேர்வுகள் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ல, நுழைவு தேர்வுகள் நடத்துவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்க கூடாது என மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த தேர்வுகள் 3 அல்லது 4ம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ல ஆனால் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள்
 

நீட்,ஜே.இ.இ. தேர்வுகள் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ல, நுழைவு தேர்வுகள் நடத்துவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்க கூடாது என மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த தேர்வுகள் 3 அல்லது 4ம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ல ஆனால் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் தேசத்தை கட்டியெழுப்பதில் பங்கு அளிப்பர். தேர்வுகளை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நரோட்டம் மிஸ்ரா

ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி உள்பட பல மாநிலங்கள் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும் நாட தயாராகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேச அரசு செப்டம்பரில் அந்த தேர்வுகளை நடத்த தயார் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் நீட் தேர்வுகளுக்கான மையங்களை அதிகரிக்கும்படி மத்திய பிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் (கோப்பு படம்)

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு 114 மையங்களில் 58,860 பேர் நீட் தேர்வு எழுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் 54,445 பேர் 84 மையங்களில் நீட் தேர்வை எழுதி இருந்தனர். இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதபவர்களை கண்காணிப்பாளர்களால் சோதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தேர்வு எழுத வருபவர்கள் மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே செல்வார்கள்.