×

குறைந்தபட்ச அரசு அதிகபட்ச தனியார்மயமாக்கல்…. மோடி அரசை நக்கல் செய்த ராகுல் காந்தி..

பல அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதை, குறைந்தபட்ச அரசு அதிகபட்ச தனியார்மயமாக்கல் என ராகுல் காந்தி நக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, எல்லையில் சீன அத்துமீறல் மற்றும் வேலையின்மை உள்பட விஷயங்களை முன்வைத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக தாக்கி வருகிறார். தற்போது ஏர் இந்தியா மற்றும் பல அரசு வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்ற
 

பல அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதை, குறைந்தபட்ச அரசு அதிகபட்ச தனியார்மயமாக்கல் என ராகுல் காந்தி நக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, எல்லையில் சீன அத்துமீறல் மற்றும் வேலையின்மை உள்பட விஷயங்களை முன்வைத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக தாக்கி வருகிறார். தற்போது ஏர் இந்தியா மற்றும் பல அரசு வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்ற தகவல்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசை கிண்டல் அடித்துள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில், மோடி அரசின் சிந்தினை, குறைந்தபட்ச அரசு அதிகபட்ச தனியார்மயமாக்கல். கோவிட் ஒரு தவிர்க்க வேண்டியது, அரசு அலுவலகங்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லாதவையாக செய்யப்பட வேண்டும். இளைஞர்களின் எதிர்காலம் திருடப்படுகிறது. நண்பர்கள் முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.

பிரதமர் மோடி

பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதை, குறைந்த அரசு அதிகபட்ச தனியார்மயமாக்கல் என மறைமுகமாக ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பிரதமர் மோடி ஆட்சி மத்தியில் ஆட்சி அமைத்தபோது, ‘குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம்’ என்ற அடிப்படையில் தனது அரசு இயங்கும் என தெரிவித்தார்.