×

’மாமியார் வீட்டுக்குப் போக திட்டமா எனக் கேட்டவருக்கு பதிலடி தந்த குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருப்பவர் குஷ்பு. இவர் ட்விட்டரின் ஆக்டிவாக இருப்பார். புதிய செய்திகள் பதிவிடுவதுடன் அதற்கு கமெண்ட் சொல்பவருக்கு பதில் சொல்வது, தனக்குப் பிடித்த பதிவுகளை ரீட்விட் செய்வது குஷ்புவின் வழக்கம். அப்படிச் சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை வரவேற்று இவர் பதிவிட்ட ட்விட் பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வரை அது குறித்து கருத்து சொன்னார். மேலும் தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்களும் குஷ்புவின் கருத்து குறித்து
 

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருப்பவர் குஷ்பு. இவர் ட்விட்டரின் ஆக்டிவாக இருப்பார். புதிய செய்திகள் பதிவிடுவதுடன் அதற்கு கமெண்ட் சொல்பவருக்கு பதில் சொல்வது, தனக்குப் பிடித்த பதிவுகளை ரீட்விட் செய்வது குஷ்புவின் வழக்கம்.

அப்படிச் சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை வரவேற்று இவர் பதிவிட்ட ட்விட் பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வரை அது குறித்து கருத்து சொன்னார். மேலும் தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்களும் குஷ்புவின் கருத்து குறித்து பதிவிட்டிருந்தார்கள்.

அவற்றிற்கு குஷ்புவே விளக்கம் சொல்லி அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது குசும்பாக ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி தந்திருக்கிறார் குஷ்பு.

குஷ்பு வேறு கட்சிக்குச் செல்லவிருக்கிறார் என்கிற யூகச்செய்தி பரவலாக கடந்த சில வாரங்களாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதைக் கேட்பதுபோல கிண்டல் செய்திருக்கிறார் Mighty Blow என்பவர்

’மாமியார் வீட்டுத் திரும்ப திட்டமா? நான் அதிமுக வைச் சொல்கிறேன்’ (Planning to come back to mamiyar veedu? I mean ADMK) என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலடியாக, ’உன் அம்மா வீடு எங்கே இருக்கு?’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

பொதுவாக, போலீஸ் ஸ்டேஷனைத்தான் மாமியார் வீடு என்று சொல்வார்கள். அப்படி கேட்டபோதும் துணிவோடு பதில் அளித்திருக்கிறார் குஷ்பு.

குஷ்புவின் பதிலுக்கு கமெண்டில் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

 

 

 

 

https://twitter.com/khushsundar/status/1289895140237049857