×

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற் இந்த ஆர்ப்பாட்டத்தில்ஏரளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை போல, தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் மூவாயிரம்ரூபாயும், கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் என உதவி தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுகொண்டனர்.மேலும், தனியார் துறை
 

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற் இந்த ஆர்ப்பாட்டத்தில்ஏரளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை போல, தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் மூவாயிரம்ரூபாயும், கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் என உதவி தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுகொண்டனர்.மேலும், தனியார் துறை பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களை உத்தரவாதப்படுத்தவும், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ளபின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.