×

விசாரணை கைதி மரணம் குறித்து, உறவினர்களிடம் நீதிபதி விசாரணை

கடலூர் விருத்தாசலம் கிளைச்சிறையில் விசாரணை கைதி செல்வமுருகன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் நீதிபதி ஆனந்த் விசாரணையை துவங்கினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி செல்வமுருகன் (39). கடந்த 31ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைதுசெய்து, விருத்தாசலம் கிளைசிறையில் அடைத்தனர். பின்னர், வலிப்பு ஏற்பட்டதாக கூறி கடந்த 4-ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன், அங்கு
 

கடலூர்

விருத்தாசலம் கிளைச்சிறையில் விசாரணை கைதி செல்வமுருகன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் நீதிபதி ஆனந்த் விசாரணையை துவங்கினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி செல்வமுருகன் (39).

கடந்த 31ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைதுசெய்து, விருத்தாசலம் கிளைசிறையில் அடைத்தனர். பின்னர், வலிப்பு ஏற்பட்டதாக கூறி கடந்த 4-ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான செல்வமுருகனின் மனைவி பிரேமா மற்றும் அவரது உறவினர்கள், அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செல்வமுருகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்ட நிலையில், நேற்று கடலூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கினர்.


மேலும் விருத்தாசலம் விரைவு நீதிமன்ற குற்றவியில் நடுவர் நீதிபதி ஆனந்த், விருத்தாசலம் கிளை சிறைக்கு சென்று செல்வமுருகனுடன் இருந்த கைதிகள் மற்றும் சிறை காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, இன்று செல்வமுருகனின் மனைவி பிரேமா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.