×

அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு

ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு (Special Protection Group) கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சோனியா காந்திக்கு டெல்லி லுடியென்ஸ் பகுதியில் உள்ள வீடு எண் 35 கொண்ட அரசு பங்களாவை மத்திய
 

ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு (Special Protection Group) கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சோனியா காந்திக்கு டெல்லி லுடியென்ஸ் பகுதியில் உள்ள வீடு எண் 35 கொண்ட அரசு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. இதில் தற்போது அவரது மகள் பிரியங்கா காந்தி வசித்துவருகிறார்.

இந்நிலையில் அரசு வழங்கிய பங்களாவிலிருந்து வெளியேறும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் பிரியங்கா காந்தி அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் அதன்பிறகு அங்கு தங்கியிருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தனை நாட்கள் தங்கியிருந்ததற்காக 3.46 லட்சம் வாடகையாக கொடுக்க வேண்டுமென்றும் பிரியங்கா காந்திக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.