×

ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டேன்… எச்சரிக்கும் பஞ்சாப் முதல்வர்

பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இவ்வளவுக்கும் வார இறுதி நாள் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை அம்மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது. மேலும், செப்டம்பர் 15ம் தேதிக்குள் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிடும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஆன்லைன் தொடர்பு நிகழ்ச்சியின் போது முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த
 

பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இவ்வளவுக்கும் வார இறுதி நாள் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை அம்மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது. மேலும், செப்டம்பர் 15ம் தேதிக்குள் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிடும் எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

இந்த சூழ்நிலையில், ஆன்லைன் தொடர்பு நிகழ்ச்சியின் போது முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அடுத்த மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டேன். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அடிக்கடி நான் கோருவதில் கவனம் செலுத்துவமாறு மக்களை அவர் வலியுறுத்தினார். பஞ்சாபில் நேற்று காலை நிலவரப்படி, கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,327ஆக இருந்தது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால் தனது டிவிட்டரில், பஞ்சாபில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த அவசியப்பட்டால் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் எச்சரிக்கை செய்துள்ளார். செப்டம்பர் 15ம் தேதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் மதிப்பிட்டுள்ளதற்கு மத்தியில், மீண்டும் மீண்டும் தான் வலியுறுத்தும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்துமாறு மக்களை அவர் வலியுறுத்தினார் என பதிவு செய்து இருந்தார்.