×

இந்தியாவில் பேஸ்புக்கில் அதிகம் விளம்பரம் செய்ததில் பா.ஜ.க.வுக்கு முதலிடம்… 18 மாதங்களில் ரூ.5 கோடி செலவு

நம் நாட்டில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் சமூக பிரச்சினைகள், தேர்தல் மற்றும் அரசியல் ஆகிய பிரிவுகளில் அதிகளவில் விளம்பரம் செய்த டாப் 10 விளம்பரதாரர்களில் முதலிடத்தில் பா.ஜ.க. உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளது. சமூக ஊடக நிறுவனத்தின் செலவு கண்காணிப்பில் கடந்த 24ம் தேதி வரை கிடைத்த தகவல்களின்படி, இந்த பிரிவுகளில் அதிகம் விளம்பரம் செய்த டாப் 10 விளம்பரதாரர்களில் 4 விளம்பரதாரர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பு உடையவர்கள். இந்தியாவில் பேஸ்புக்கில் இந்த பிரிவுகளில்
 

நம் நாட்டில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் சமூக பிரச்சினைகள், தேர்தல் மற்றும் அரசியல் ஆகிய பிரிவுகளில் அதிகளவில் விளம்பரம் செய்த டாப் 10 விளம்பரதாரர்களில் முதலிடத்தில் பா.ஜ.க. உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளது. சமூக ஊடக நிறுவனத்தின் செலவு கண்காணிப்பில் கடந்த 24ம் தேதி வரை கிடைத்த தகவல்களின்படி, இந்த பிரிவுகளில் அதிகம் விளம்பரம் செய்த டாப் 10 விளம்பரதாரர்களில் 4 விளம்பரதாரர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பு உடையவர்கள்.

பா.ஜ.க.

இந்தியாவில் பேஸ்புக்கில் இந்த பிரிவுகளில் டாப் 10 விளம்பரதாரர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.15.81 கோடி செலவிட்டுள்ளனர். இதில் பா.ஜ.க. மட்டும் 2019 பிப்ரவரி முதல் கடந்த 18 மாதங்களில் பேஸ்புக்கில் விளம்பரத்துக்காக ரூ.4.61 கோடி செலவிட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பேஸ்புக்கில் விளம்பரத்துக்காக ரூ.1.84 கோடி செலவிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி பேஸ்புக் விளம்பரத்துக்காக ரூ.69 லட்சத்தை செலவிட்டுள்ளது.

காங்கிரஸ்

டாப் 10 விளம்பரதாரர்களில் செய்தி வலைதளமான டெய்லிஹண்ட், ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட் மற்றும் வீடியோ ஷேர் ஆப் பப்ளிக் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன. டெய்லிஹண்ட் பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமாக கொடுத்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.86.43 லட்சத்தை பேஸ்புக் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளது. பப்ளிக் ஆப் விளம்பரத்துக்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.1.24 கோடி கொடுத்துள்ளது.