×

திருநங்கைகளுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!

அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,24,979 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 2,123 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்துல் 5,347 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 63 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை மேலும் தடுக்க தடுப்பூசி போடும் பணிகளில் அசாம் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அசாம் அரசு அமைத்துள்ளது. இந்த முகாமில் 30 திருநங்கைகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். அசாம்
 

அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,24,979 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 2,123 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்துல் 5,347 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 63 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை மேலும் தடுக்க தடுப்பூசி போடும் பணிகளில் அசாம் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அசாம் அரசு அமைத்துள்ளது. இந்த முகாமில் 30 திருநங்கைகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். அசாம் அரசின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ள திருநங்கைகள் சங்கத்தின் நிறுவனரும், அசாம் அரசாங்கத்தின் திருநங்கைகள் நல வாரியத்தின் துணைத் தலைவருமான சுவாதி பிதன் பாருவா, “பெரும்பாலான திருநங்கைகளின் வருமானத்திற்கான முக்கிய ஆதாரம் பிச்சை எடுப்பதாகும். அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதால் எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தங்களுக்கு தடுப்பூசி கிடைத்தது மிகவும் சந்தோஷம்” என தெரிவித்தார்.