×

கெஜ்ரிவால் ஊழல் செய்து இருந்தால் நீங்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.. பா.ஜ.க.வுக்கு அன்னா ஹசாரே கேள்வி

கெஜ்ரிவால் அரசு ஊழல் செய்து இருந்தால் அதற்கு எதிராக ஏன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பா.ஜ.க.வுக்கு அன்னா ஹாசரே கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி அரசுக்கு எதிராக போராட வருமாறு அன்னா ஹசாரேவுக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்து இருந்தார். அதற்கு அன்னா ஹசாரே அதிரடியாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு பா.ஜ.க. தலைவரின் அழைப்பை படித்ததில் எனக்கு
 

கெஜ்ரிவால் அரசு ஊழல் செய்து இருந்தால் அதற்கு எதிராக ஏன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பா.ஜ.க.வுக்கு அன்னா ஹாசரே கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி அரசுக்கு எதிராக போராட வருமாறு அன்னா ஹசாரேவுக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்து இருந்தார். அதற்கு அன்னா ஹசாரே அதிரடியாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு பா.ஜ.க. தலைவரின் அழைப்பை படித்ததில் எனக்கு வேதனை ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கட்சி ஒரு வெகுஜன போராட்டத்துக்கு 83 வயதான பக்கீரை அழைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசாங்கத்தின் கீழ் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையுடன் . 6 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது, டெல்லி அரசு ஊழல் செய்து இருந்தால் அதற்கு (கெஜ்ரிவால் அரசுக்கு) எதிராக ஏன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அன்னா ஹசாரே

ஊழலை ஒழிக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று பிரதமர் எப்போதும் கூறுகிறார். டெல்லி அரசு ஊழல் செய்திருந்தால் உங்கள் அரசாங்கம் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அல்லது ஊழலை அழிப்பதற்கான மத்திய அரசின் கூற்றுக்கள் அனைத்தும் பயனற்றவையா? அனைத்து கட்சிகளும் சுய ஆய்வு செய்து தங்கள் சொந்த குறைபாடுகளை ஒப்புக்கொள்ள வேண்டிய தேவை இப்போது உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதேஷ் குப்தா

டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா கடந்த தினங்களுக்கு முன் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மி அரசு சுத்தமான மற்றும் நியாயமான ஆட்சி அளிப்போம் என்று ஆட்சிக்கு வந்தது.
ஆம் ஆத்மி அரசு அரசியல் தூய்மையின் அனைத்து வரம்புகளையும் இடித்து விட்டது. ஆம் ஆத்மி திட்டமிட்ட வகுப்புவாத கலவரத்தால் டெல்லி மக்கள் பாதிக்கப்பட்டனர். சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஊழலின் புதிய பெயர் ஆம் ஆத்மி கட்சி, நாங்கள் அந்த கட்சிக்கு எதிராக நிலையாக போராடி வருகிறோம். ஆகையால் அன்னா ஹாசாரே டெல்லிக்கு வர வேண்டும், ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், போராட்டத்தில் எங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.