×

75 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

கொரோனாவினால் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், கடந்த சில நாட்களாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று 75 லட்சத்தை கடந்தது. இதனால் குணமடைந்தோர் பட்டியலில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 53,285 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் தற்போது 5,61,908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில்
 

கொரோனாவினால் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், கடந்த சில நாட்களாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று 75 லட்சத்தை கடந்தது. இதனால் குணமடைந்தோர் பட்டியலில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 53,285 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் தற்போது 5,61,908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் உள்ள மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுபவர்கள் 6.83% பேர் உள்ளனர். கடந்த 2 மாதத்தில், சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 3 மடங்குக்கு மேல் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 21.16 ஆக இருந்தது.

நாட்டில் கடந்த ஜனவரி முதல், கொவிட்-19 பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பரிசோதனை அதிகரிப்பு, பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறிந்து, ஏற்ற சிகிச்சை அளிக்க வழிவகுக்கிறது. இந்தியாவில் இன்று கோவிட் பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 11 கோடியை (11,07,43,103) தாண்டியது.

நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைவோர் விகிதம் 91.68% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,321 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மாநிலங்களில் தினசரி குணமடையும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஆறாம் இடத்திலும், புதிய நோயாளிகள் அதிகபரிப்பதில் ஏழாம் இடத்திலும், மரணிப்போர் எண்ணிக்கையில் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.