×

மேட்டூரில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதி!

பொதுவாக திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அங்கு கொரோனா பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால், குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இருப்பினும் மக்கள் அரசின் அறிவுறுத்தலை கேட்பதாக இல்லை. கடந்த 21 ஆம் தேதி கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 2 மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியாகியது.
 

பொதுவாக திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அங்கு கொரோனா பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால், குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இருப்பினும் மக்கள் அரசின் அறிவுறுத்தலை கேட்பதாக இல்லை. கடந்த 21 ஆம் தேதி கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 2 மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியாகியது. அதன் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில், அங்குச் சென்ற 58 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 58 பேருக்கு கொரோனா உறுதியானதால், அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதன் முடிவில் தான் மேலும் 70 பேருக்கு கொரோனா பரவி இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.