×

2021 ஐபிஎல் –க்கு வீரர்களை ஏலம் எடுப்பது ரத்து? சாதகமா… பாதகமா?

கடந்த பத்தாண்டுகளாக கோடைக்காலத்தின் மாபெரும் கேளிக்கையாக ஐபிஎல் போட்டிகளே திகழ்கின்றன. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு தள்ளிக்கொண்டே சென்றது. இறுதியில் நோய்த் தொற்றின் வீச்சு அதிகமாக இருந்ததால் ஐபிஎல் போட்டிகள் கைவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் பல போட்டிகள் கைவிடப்பட்டன. இந்த ஆண்டு கைவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிர அமீரகத்தில் செப்டம்பரில் தொடங்குகிறது. இப்போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நவம்பரில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். பொதுவாக ஐபிஎல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு
 

கடந்த பத்தாண்டுகளாக கோடைக்காலத்தின் மாபெரும் கேளிக்கையாக ஐபிஎல் போட்டிகளே திகழ்கின்றன. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு தள்ளிக்கொண்டே சென்றது. இறுதியில் நோய்த் தொற்றின் வீச்சு அதிகமாக இருந்ததால் ஐபிஎல் போட்டிகள் கைவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் பல போட்டிகள் கைவிடப்பட்டன.

இந்த ஆண்டு கைவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிர அமீரகத்தில் செப்டம்பரில் தொடங்குகிறது. இப்போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நவம்பரில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

பொதுவாக ஐபிஎல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன், ஒவ்வோர் அணிக்கும் எந்தெந்த வீரர் என்பதை முடிவு செய்ய ஏலம் நடத்தப்படும். அதில் ஒரு வீரருக்கு எந்த அணி அதிக தொகை அளிக்கிறதோ அந்த அணியில் அந்த வீரர் ஆடுவார். ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு இந்த நடைமுறை கைவிடப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். 2020 ஆண்டு ஐபிஎல் போட்டிக்கும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கும் இடையேயான காலம் மிகவும் குறைவானது.

எனவே, இந்தக் குறுகிய காலத்தில் ஒரு வீரரின் விளையாட்டுத் திறனை மதிப்பிடுவதும், ஏலம் நிகழ்ச்சியை நடத்துவதும் சிரமம் என்பதால் ஏலமுறை அடுத்த ஆண்டு போட்டிகளுக்கு மட்டும் கைவிடப் படுகிறது.

2020 ஆண்டு ஐபில் போட்டிகளில் ஆடும் வீரர்களைக் கொண்டே அடுத்த ஆண்டு போட்டியிலும் ஆடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். ஐபிஎல் வாரியத்தின் முடிவை அனைத்து அணி நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இது சாதகமா… பாதகமா. என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆண்டில் ஏலத்தில் விலை போகாத வீரர்கள் அடுத்த முறை தேர்வு செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு பெரும் ஏமாற்றம்.

அவர்களை விடவும் புதிய இளம் வீரர்கள் ஐபிஎல்லில் நுழையலாம் என காத்திருப்பவர்களுக்கு ஓராண்டு காலம் தள்ளிப்போவது அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாகவே இருக்கும்.