×

காந்தி தலைமையில் திருமணம் செய்துகொண்ட நடனம் கலைஞர் அமலா சங்கர் மரணம்!

இனம், மொழி, நிறம், வர்க்கம் எல்லாம் கடந்து மனிதர்களை இணைப்பது கலைகளே. அவைதாம் மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத் தன்மையைக் குறைக்கச் செய்து மனிதநேயம் அளிப்பவை. பலரின் துயரங்களைப் போக்குவதே கலைகள்தாம். அப்படி பலருக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளித்த கொல்கத்தாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமலா சங்கர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. 1919 இல் ஜூன் 27 வங்கத்தில் பிறந்த அமலா. அவரின் தந்தை மகளை எல்லாமும் கற்ற ஒருவராக வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
 

இனம், மொழி, நிறம், வர்க்கம் எல்லாம் கடந்து மனிதர்களை இணைப்பது கலைகளே. அவைதாம் மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத் தன்மையைக் குறைக்கச் செய்து மனிதநேயம் அளிப்பவை. பலரின் துயரங்களைப் போக்குவதே கலைகள்தாம். அப்படி பலருக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளித்த கொல்கத்தாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமலா சங்கர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.

PC: Google

1919 இல் ஜூன் 27 வங்கத்தில் பிறந்த அமலா. அவரின் தந்தை மகளை எல்லாமும் கற்ற ஒருவராக வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். நடனம் கற்ற இவர் சங்கர் என்பவரோடு சேர்ந்து உலகமெங்கும் பயணம் செய்து நடன நிகழ்ச்சிகள் செய்தார். ரஷ்யாவின் பாலே நடனத்தோடு இந்திய நாட்டியத்தையும் இணைத்து புதிய பாணி நடனத்தை தோற்றுவித்தார்கள். அந்த முறை நடனத்திற்கு ரசிகர்களின் ஆதரவு வெகுவாக இருந்தது. எல்லா ஊர்களிலிருந்தும் இவர்களை நடன நிகழ்ச்சிகாக அழைத்துக்கொண்டே இருந்தார்.

PC: Google

அப்படித்தான் சென்னைக்கு வரும்போது சங்கர், அமலாவிடம் தன் திருமண விருப்பத்தைச் சொன்னார். அவரின் ஆசைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்தது. அத்தோடு அப்போதைய தேசிய தலைவர்களோடும் இருவரும் நல்ல நட்பில் இருந்தார்கள்.

PC: Google

கணவர் சங்கர் இயக்கிய கல்பனா திரைப்படம் 1948 ஆம் ஆண்டு ஜனவரி –ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தையும் பிடித்தது. அமலா அந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உலக திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டது. புகழ்பெற்ற இசைக்கலைஞர் ரவிசங்கரின் அண்ணிதான் அமலா சங்கர்.

ஒரு கட்டத்தில் கணவரோடு இணைந்து வாழ முடியாத நிலையில் பிரிந்து வாழ்ந்தார். ஆயினும் தம் ஆனந்த், மம்தா ஆகியோரை எல்லோரும் பாராட்டும்படியாக வளர்த்தெடுத்தார்.

PC: wikipedia

இந்திய கம்யூனிஸ்ட்சி கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன், அமலா சங்கரின் நினைவுகளைப் பற்றி பகிர்கையில், ’இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்னுடைய தலைமை அலுவலகம் பாலன் இல்லம், ஒரு காலத்தில் புகழ் பெற்ற உதயசங்கர் அமலா சங்கர் ஆகிய இருவரின் நடன அரங்கமாக இருந்தது. அவர்கள் சென்னையை விட்டு குடிபெயர்ந்த போது, அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பலர் முன் வந்தும் கூட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் தருவேன் என்று உறுதியோடு இருந்தவர் அன்புத் தாய் அமலா சங்கர்’ என்று குறிப்பிடுகிறார்.