×

10 லட்சம் பேர் – ரஷ்யாவின் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை #CoronaUpdate

கொரோனா பேரிடர் என்பது இதுவரை இந்த உலகம் கண்டறிராதது. எல்லா துறை சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கி விட்டது இந்தக் கொரோனா. நோய்த் தொற்றைக் கட்டுபடுத்த லாக்டெளன், தனிமைப்படுத்தல் என என்ன முயற்சி எடுத்தும் முழு பலன் கிட்டவில்லை. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. செப்டம்பர் 01-ம் தேதி காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 56 லட்சத்து 14 ஆயிரத்து 665 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது.
 

கொரோனா பேரிடர் என்பது இதுவரை இந்த உலகம் கண்டறிராதது. எல்லா துறை சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கி விட்டது இந்தக் கொரோனா.

நோய்த் தொற்றைக் கட்டுபடுத்த லாக்டெளன், தனிமைப்படுத்தல் என என்ன முயற்சி எடுத்தும் முழு பலன் கிட்டவில்லை. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

செப்டம்பர் 01-ம் தேதி காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 56 லட்சத்து 14 ஆயிரத்து 665 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 19 நாட்களுக்குள் 48 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 79 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 54 ஆயிரத்து 029 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

Blood sample tube positive with COVID-19 or novel coronavirus 2019 found in Wuhan, China

ரஷ்யாவில் சமீபநாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ரஷ்யாவும் இடம்பெற்றிருக்கிறது

இன்று மதியம், ரஷ்யாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துவிட்டது. மதிய நேர நிலவரப்படி, மொத்த எண்ணிக்மை 10.00,048 பேர். இவர்களில் 8,15,705 பேர் குணம் அடைந்துள்ளனர். 17,299 பேர் சிகிச்சை பலனிக்காது இறந்துவிட்டனர்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாதான் தயாரித்துள்ளது. அதை சென்ற மாதம் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. ஸ்புட்னிக் வி எனும் பெயரிட்டுள்ள அந்தக் கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உலகிற்கு சொல்ல, அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே செலுத்தச் சொல்லியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின்.