×

இப்பவும் அதே மேஜிக்கை நிகழ்த்துகிறது... 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தைப் புகழ்ந்துள்ள லிங்குசாமி!

இப்பவும் அதே மேஜிக்கை நிகழ்த்துகிறது... 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தைப் புகழ்ந்துள்ள லிங்குசாமி!
 

இயக்குனர் லிங்குசாமி கௌதம் மேனனின் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்கு ரீவிசிட் அடித்ததுடன் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இயக்கத்தில் 'தி வாரியர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை மீண்டும் பார்த்துள்ள இயக்குனர் லிங்குசாமி படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நான் தற்போது இயக்கி வரும் தி வாரியர் படத்தின் இறுதி கட்ட பணிகளின் போது என்னைப் புதுப்பித்துக் கொள்ள, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தைப் பார்க்க நேர்ந்தது.  

இத்தனை வருடங்கள் கழித்தும் எழுத்து, இசை மற்றும் காட்சியமைப்பில் என்ன ஒரு மாயாஜாலத்தைக் காண்பிக்கிறது இந்தப் படம். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய காதல் படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். சிம்புவும் த்ரிஷாவும் படம் முழுக்க காதல் பொழிந்துள்ளனர். சிறப்பு குறிப்பு ஏஅர் ரஹ்மான் சார் கூட. இந்த அற்புதமான படத்திற்காக நன்றி கௌதம் மேனன்." என்று தெரிவித்துள்ளார். 


'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியான போது இளைஞர்களால் அந்தப் படம் கொண்டாடப்பட்டது. கௌதம் மேனன் காதலை மிக அழகாகக் காண்பிப்பதில் வல்லவர் என்பதை அந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருந்தார். தமிழின் ஆகச்சிறந்த காதல் படங்களில் அந்தப் படத்திற்கும் முக்கிய இடமுண்டு என்பது மறுக்க முடியாதது.