×

ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளில் செம ட்ரீட்.. ‘இடிமுழக்கம்’ ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட உதயநிதி !

ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளில் செம ட்ரீட்.. ‘இடிமுழக்கம்’ ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட உதயநிதி !
 

ஜி.வி.பிரகாஷின் பிறந்தநாளையொட்டி ‘இடிமுழக்கம்’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் உதயநிதி இன்று வெளியிட்டுள்ளார். 

முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடிமுழக்கம்’. யதார்த்த சினிமாவை படமாக்கும் சீனு ராமசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது முதல்முறையாக சீனு ராமசாமி மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சாதாரண மனிதனின் வாழ்க்கையைதான் படமாக எடுத்து வருகிறார். ஆனால் இந்த படத்தை தன்னுடைய வழக்கமான பாணியில் இல்லாமல் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக எடுத்துள்ளார். மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.   

ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்து வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறறு வருகிறது. விரைவில் வெளியாகும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவில் ஜி.வி.பிரகாஷின் லுக் உள்ளது. நிச்சயம் இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும்.