×

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படங்கள் !

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படங்கள் !
 

பிரபல நடிகரான மகத், தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

நடிகர் அஜீத்தின் ‘மங்காத்தா’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் மகத். அதன்பிறகு ‘பிரியாணி’, ‘வடகறி’, ‘சென்னை 28 -2’, ‘அன்பானவன் அடங்காதன் அசராதவன்’, ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்துக்கொண்டு ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றார்.

இதையடுத்து ‘காதல் Condition apply’ என்ற புதிய படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.  ஆர்.அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே பிராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் மகத். இதையடுத்து தனக்கு மகன் பிறந்துள்ளதை  சமூக வலைத்தளத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் தனது மகனின் பிறந்தநாளை நடிகர் மகத் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். தனது மகனுடன் ஜாலியாக விளையாடும் புகைப்படங்களையும் மகத்  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.