×

இதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா! அதுவும் ரயிலில்…

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் சிறப்பு விடுமுறைக்கால சுற்றுலாவை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் சிறப்பு விடுமுறைக்கால சுற்றுலாவை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலா விவரம்: மதுரையிலிருந்து கிளம்பி கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு, மேல்கோட்டை, ஸ்ரீரங்கப்பட்டினம், தலைக்காவிரி, கூர்க்(குடகு), மைசூரு ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலாத்தலங்களை பயணிகள் கண்டு ரசிக்கலாம். முக்கியக் கோயில்களிலும் தரிசனம் செய்யலாம். சுற்றுலா சிறப்பு ரயில் மதுரையிலிருந்து 16ம் தேதி அதிகாலை 5 மணிக்கு
 

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் சிறப்பு விடுமுறைக்கால சுற்றுலாவை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் சிறப்பு விடுமுறைக்கால சுற்றுலாவை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுலா விவரம்:

மதுரையிலிருந்து கிளம்பி கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு, மேல்கோட்டை, ஸ்ரீரங்கப்பட்டினம், தலைக்காவிரி, கூர்க்(குடகு), மைசூரு ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலாத்தலங்களை பயணிகள் கண்டு ரசிக்கலாம். முக்கியக் கோயில்களிலும் தரிசனம் செய்யலாம்.
சுற்றுலா சிறப்பு ரயில் மதுரையிலிருந்து 16ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கிளம்புகிறது. திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மைசூரை சென்றடையும். அன்றைக்கு இரவு தங்கல் மைசூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் 17ம் தேதி காலையில் சாதாரண ரக பேருந்து மூலம் முதலில் நஞ்சன்கூடு சென்று அங்குள்ள ஸ்ரீ கந்தேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு மேல்கோட்டைக்குப் புறப்பட வேண்டும். மேல்கோட்டையில் உள்ள ஸ்ரீ செலுவநாராயணா கோயில், யோக நரசிம்மர் திருக்கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு புறப்பட வேண்டும். அங்குள்ள ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களில் இரவு தங்க வேண்டும்.

18ம் தேதி காலையில் குடகு வழியாக தலைக்காவிரிக்கு சென்று காவிரி அம்மனை தரிசனம் செய்துவிட்டு பாகமண்டலம் சிவன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு குடகுக்கு திரும்ப வேண்டும். அங்கு ஒரு மணிநேரம் ஓய்வெடுத்த பின்னர் கிளம்பி வழியில் குஷால்நகரில் உள்ள திபெத்திய தங்கக்கோயிலில் தரிசனம். அங்கிருந்து கிளம்பி மைசூரு வந்து இரவு தங்கல்.

மறுநாள் 19ம் தேதி மைசூரு லோக்கல் டூர். சாமுண்டி மலையில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயிலில் தரிசனம், மைசூரு அரண்மனை, கிருஷ்ணராஜ சாகர் அணை, பிருந்தாவனம் தோட்டம் ஆகிய இடங்களைப் பார்த்துவிட்டு மைசூரு வந்தடையவேண்டும். இரவு சிறப்பு ரயிலில் கிளம்பி ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, சென்னை எழும்பூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 20ம் தேதி மாலையில் வந்தடைய வேண்டும். சிறப்புரயில் கிளம்பும், வந்தடையும் நேரங்கள் மாற்றத்தலுக்குள்ளானவை. பயணத்துக்கான கட்டணத்தை செலுத்தியவர்கள் வராவிட்டால் கட்டணம் திரும்பித்தரப்பட மாட்டாது.

வசதிகள்: 

  • ரயிலில் இரண்டாவது வகுப்பு படுக்கை வசதி அளிக்கப்படும். இரவு தங்கல், கோயில் தரிசனத்துக்கு முன் ஆயத்தமாவதற்கான இடம், பெரிய ஹால் அல்லது டார்மிட்டரி வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும்.
  • தினமும் காலை காபி அல்லது டீ, சிற்றுண்டி, மதியம்-இரவு உணவு மற்றும் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்.
  • லாண்டிரி, மருந்து, நினைவிடங்கள் அனுமதிக்கட்டணம், டூர் கைடு செலவு மற்றும் இதில் குறிப்பிடாத செலவினங்கள் பயணக்கட்டணத்தில் அடங்காது.

எல்.டி.சி. சான்று:
வேலை பார்க்கும் பயணிகள் தங்கள் நிறுவனத்திடம் கட்டணத்தை திரும்பிப் பெற்றுக்கொள்வதற்கான லீவ் டிராவல் கன்செஷன் (எல்.டி.சி.) சான்று பயண முடிவில் வழங்கப்படும்.  ரயில் மற்றும் பிற போக்குவரத்து கட்டணத்துக்கு மட்டுமே எல்டிசி சான்று வழங்கப்படும்.

டிக்கெட்டை கேன்சல் செய்யலாம்:

  • ரயில் கிளம்பும் தேதியிலிருந்து 15 நாள்களுக்கு முன் – நபர் ஒருவருக்கு தலா ரூ.100
  • 8 முதல் 14 நாள்களுக்கு முன் –  கட்டணத்தில் 25% பிடித்தம்
  • 4 முதல் 7 நாள்களுக்கு முன் – கட்டணத்தில் பாதி
  • 4 நாள்களுக்குள் – கட்டணம் வாபஸ் இல்லை

விதிகள்:

  • காலை சிற்றுண்டியுடன் காபி அல்லது டீ, மதிய உணவு, இரவு உணவு/டிபன் வழங்கப்படும்.
  • ரயில்வே நிலையத்தில் இருந்து 55 இருக்கைகள் கொண்ட சாதாரண பேருந்து மூலம் உள்ளூர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • நுழைவுக்கட்டணங்கள், சிறப்புப் பூஜை கட்டணங்கள், குதிரை சவாரி, படகு சவாரி செலவுகள் பயணிகளுடையது.
  • தங்குவதற்கு பெரிய ஹால் அல்லது டார்மிட்டரி படுக்கை வசதி செய்யப்படும்.
  • தலையணை, துணிகள் உலரவைக்க நைலான் கயிறு, லக்கேஜ்களுக்கான பூட்டு சாவி, பக்கெட் மக், டார்ச் லைட், குடை, மருந்துகள், சாப்பிட பிளேட், டம்ளர் போன்றவற்றை கொண்டு வரவேண்டும்.
  • சுற்றுலா கட்டணத்தில் சாதாரண படுக்கை அல்லது மூன்றாம் வகுப்பு ஏசி படுக்கை, சைவ சிற்றுண்டி, மதியம், இரவு உணவு, லோக்கல் டூர், தங்கும் வசதி ஆகியவை அடங்கும்.
  • தனிப்பட்ட யாருக்கும் சிறப்புச்சலுகைகள் கிடையாது.
  • அடாவடி பயணிகளுக்கு அனுமதியில்லை.
  • ரயிலில் புகை, மதுவுக்கு அனுமதியில்லை.
  • டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு போன்ற ஏதாவது ஒன்று அவசியம்.
  • பயண நேரம் மாறுதலுக்குள்பட்டது.

கட்டணம்: 5 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு தலா ரூ.5635

பயணம்: 4 இரவு/ 5 பகல்

சுற்றுலா பேக்கேஜ் கோடு: SZBD340 
     
ஐர்சிடிசி அலுவலகத் தொடர்புக்கு:
சென்னை- 044 25352987, 9003140680, 9003140681
மதுரை – 0452 2345757, 9003140714
கோவை – 9003140655