×

“ராமுவுக்கும் கொரோனா வந்துடுமோன்னு பயந்துட்டேன்”.. நாய்க்கும் மாஸ்க் போட்டுவிட்டு வெளியே கூட்டிச்செல்லும் நபர்!

பலர் அதன் பாதுகாப்பை உணராமல், மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த பட்டிருப்பினும் பலர் அதன் பாதுகாப்பை உணராமல், மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். இந்நிலையில், ஒரு நபர் தான் வளர்க்கும் நாய்க்கும் மாஸ்க் அணிந்து, சானிடைசர் போட்டு விட்டு வெளியே கூட்டிச்செல்வது பாராட்டை பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் ராமு என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கொரோனா பரவிதில் இருந்து ராமுக்கு அவர் மாஸ்க்
 

பலர் அதன் பாதுகாப்பை உணராமல், மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த பட்டிருப்பினும் பலர் அதன் பாதுகாப்பை உணராமல், மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். இந்நிலையில், ஒரு நபர் தான் வளர்க்கும் நாய்க்கும் மாஸ்க் அணிந்து, சானிடைசர் போட்டு விட்டு வெளியே கூட்டிச்செல்வது பாராட்டை பெற்றுள்ளது. 

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் ராமு என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கொரோனா பரவிதில் இருந்து ராமுக்கு அவர் மாஸ்க் அணிவித்து தான் வெளியே கூட்டிச் செல்கிறாராம். இது குறித்து பேசிய அசோகன், கடந்த 2 1/2 வருடங்களாக ராமுவுடன் தான் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன். எனக்கு அவன் மீதிலும்,  அவனுக்கு என் மீதிலும் அதிக அளவு பாசம். இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ் ஒரு புலிக்கு பரவி விட்டது என்று அறிந்து பயந்து விட்டேன். அதனால் தான் ராமுவுக்கு மாஸ்க் அணிந்து வெளியே கூட்டிச் செல்கிறேன். 

ராமுவை வெளியே கூட்டிச் சென்று வீட்டுக்கு வரும் போது, நானும் அவனும் கைகளில் சானிடைசர் போட்டு சுத்தப்படுத்திக் கொண்டு தான் உள்ளே செல்வோம். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் தான் வெளியே செல்வேன்” என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.