×

“ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பேட்டிங்”: கைதட்டி ஆரவாரம் செய்த அமைச்சர்கள்!

மற்றபடி வேறெங்கும் சொல்லும்படியாக கிரிக்கெட் மைதானங்கள் தமிழகத்தில் இல்லை. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. மற்றபடி வேறெங்கும் சொல்லும்படியாக கிரிக்கெட் மைதானங்கள் தமிழகத்தில் இல்லை. இந்நிலையில் சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பில் சர்வதேச தரத்திலான மைதானம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில் அமைந்துள்ளது. 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் உருவாகியுள்ள இந்த மைதானத்தின் தொடக்கப்பணியானது கடந்த 2017 இல் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் ரூ. 8 கோடி
 

மற்றபடி  வேறெங்கும் சொல்லும்படியாக கிரிக்கெட் மைதானங்கள் தமிழகத்தில் இல்லை.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. மற்றபடி  வேறெங்கும் சொல்லும்படியாக கிரிக்கெட் மைதானங்கள் தமிழகத்தில் இல்லை.

இந்நிலையில் சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பில் சர்வதேச தரத்திலான மைதானம்  வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில் அமைந்துள்ளது.  2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில்  உருவாகியுள்ள இந்த மைதானத்தின் தொடக்கப்பணியானது கடந்த 2017 இல் ஆரம்பிக்கப்பட்டது.

சுமார்  ரூ. 8 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன், ரூபா குருநாத்  மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் புதிய கிரிக்கெட் மைதானத்தில் டிராவிட் பந்துவீச, தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்தார். சில நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்வை கண்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.