×

“மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பு”

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் இரண்டாம் முறையாக அதிகரித்துள்ளதால் தடுப்பூசி செலுத்தும் முறையை போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்த வேண்டும் எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு அண்மையில் கடிதம் எழுதியது. ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசின் தவறான கொள்கையால் மக்கள்
 

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் இரண்டாம் முறையாக அதிகரித்துள்ளதால் தடுப்பூசி செலுத்தும் முறையை போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்த வேண்டும் எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு அண்மையில் கடிதம் எழுதியது. ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசின் தவறான கொள்கையால் மக்கள் பெரும்விலை தரவேண்டியுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இந்திய மருத்துவ கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. பல மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத்துக்கு தடுப்பூசி வேண்டுமென கோரியுள்ளனர்.

ஆயினும் உலகளாவிய தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எந்தவொரு முன் பதிவு இல்லாமல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி வழங்கவேண்டும் என்பது காலத்தின் தேவை. ஆனால் மத்திய அரசின் பிடிவாதமான நிலைப்பாட்டின் காரணமாக, ஒவ்வொரு நாளும் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறது. இதனால் ஒரு பெரிய பேரழிவு நாட்டிற்கு காத்திருக்கிறது. மோடி அரசாங்கத்தைப் போல உலகில் வேறு எந்த ஜனநாயக அரசும் இல்லை. பி.ஜே.பி அரசாங்கத்தின் தவறான கொள்கையால் தடுப்பூசி தடுப்பு திட்டத்திற்கு இந்தியர்கள் பெரும் விலை கொடுக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.