×

“காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை” பணிச்சுமையால் காவலர் தற்கொலை

திண்டிவனம் சப் ஜெயில் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லியக்கோடன் நகரை சேர்ந்த பாரதி மணிகண்டன், திண்டிவனம் சப் ஜெயிலில் காவலராக பணியாற்றிவருகிறார். நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இவர் நின்றுக்கொண்டே பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மணிகண்டன் பிளேடால் கையை கிழித்து கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த உடனிருந்த காவலர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்துக்கொண்ட மணிகண்டன்
 

திண்டிவனம் சப் ஜெயில் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லியக்கோடன் நகரை சேர்ந்த பாரதி மணிகண்டன், திண்டிவனம் சப் ஜெயிலில் காவலராக பணியாற்றிவருகிறார். நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இவர் நின்றுக்கொண்டே பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மணிகண்டன் பிளேடால் கையை கிழித்து கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த உடனிருந்த காவலர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்துக்கொண்ட மணிகண்டன் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நின்று கொண்டே பணி செய்ய சப் ஜெயிலர் உத்தரவிட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக வாக்குமூலம் அளித்தார். காவலர் வேலை மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.