×

“ஆபத்தான சூழலில் பத்திரிகையாளர்கள்: செய்தியாளர்கள் சந்திப்பை தவிருங்கள்” : தமிழக அரசுக்கு கோரிக்கை!

பத்திரிகையாளர்கள் ஊரடங்கிலும் களத்தில் நின்று குடும்பங்களை மறந்து இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா தொற்று நடவடிக்கையாக மீண்டும் ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் என பலர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.
 

பத்திரிகையாளர்கள் ஊரடங்கிலும் களத்தில் நின்று குடும்பங்களை மறந்து இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர். 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா தொற்று  நடவடிக்கையாக மீண்டும் ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலிலும்  மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார்,  பத்திரிகையாளர்கள் என பலர்  இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.   குறிப்பாக பத்திரிகையாளர்கள் ஊரடங்கிலும் களத்தில் நின்று குடும்பங்களை மறந்து இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்க  தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவது அச்சுறுத்தும் கொரோனா தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. காவல்துறையினர்,மருத்துவத்துறையினர்,தூய்மைப் பணிபுரிவோர்  போன்று இரவும் பகலுமாக பத்திரிகையாளர்கள்  ஆபத்தான சூழலில் பணியாற்றி வருகிறார்கள். 

கொரோனா நோய்த்தொற்றை தடுக்க – முறியடிக்க உலகின் பல நாடுகள் போராடி வருகின்றன.
சமுகவிலகலே இந்த கொரோனா நோய்த்தொற்றை பரவாமல் தடுக்கும் என்ற நிலையில் செய்தியாளர்களுக்கு எந்தவிதமான உரிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாத நிலையில் மருத்துவமனை வளாகங்களிலும் மற்ற இடங்களிலும் நெருக்கமான சூழலில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவது நோய்த்தொற்றை பரப்பும் வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்யும். 

மக்களுக்கு சென்றடைய வேண்டிய முக்கியமான செய்திகளை தெரிவிக்க காணொளிகள்,டிஜிட்டல் செய்தியாளர் சந்திப்பு ,தினசரி ஊடக அறிக்கைகள் ஆகிய வழிமுறைகள் கடைப்பிடிக்க தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம்  வலியுறுத்துகிறது. 
மேலும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் முகம் தெரியாமல் தியாக உணர்வுடன் பலர்  பாடுபட்டுக் கொண்டிருக்க இன்றைய தேவை விழிப்புணர்வு மட்டுமே.

கொரோனா காலக்கட்டத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு தொலைபேசி வாயிலாகவே பதில் தரக்கூடிய அளவில் சுகாதாரம்,உள்ளாட்சி ஆகிய துறைகளில் மூத்த அதிகாரிகளை அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களாக நியமித்து அவர்களது விவரங்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பது என்பது தேவைப்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண உதவும்.இதை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.