×

“Our Teachers Our Heroes” ஆசிரியர்கள் தினத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து!

ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் ஓபிஎஸ், கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வி சிறந்த தமிழ்நாடு என்னும் மகாகவி
 

ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் ஓபிஎஸ், கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வி சிறந்த தமிழ்நாடு என்னும் மகாகவி பாரதியின் சொல்லை மெய்யாக்கி, தமிழகத்தை தலைநிமிர்ந்து நடைபோடச் செய்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள்.

உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழக் காரணம் தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே! #ஆசிரியர்தினம்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக இளைஞரணி செயலாளர் கனிமொழி, “கல்வியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கியதில், ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மென்மேலும் தமிழகத்தை அறிவுசார் சமூகமாக மாற்றி வரும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாணவனை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது. கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் தினத்தன்று, நம் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள்க்கு அஞ்சலி செலுத்துவோம் #OurTeachersOurHeroes” என பதிவிட்டுள்ளார்.