“DON’T COME HERE… GET OUT!” தன்னை நோக்கி வந்த திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்திகேயனிடம் ஆவேசமான சபாநாயகர்..!
சர்க்காரியா கமிஷன், மிசா குறித்த முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிராக, திமுக உறுப்பினர்கள் 'செத்துப்போச்சு செத்துப்போச்சு ஜனநாயகம் செத்துப்போச்சு' கூறி முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது திமுகவினர் அவையை முடக்கப்பார்ப்பதாகவும், அதற்கான பயிற்சியை மட்டுமே எடுத்து வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். சபாநாயகர் திமுக உறுப்பினரை பார்த்து கெட் அவுட் என கத்தினார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான முதலமைச்சர் விஜயின் பேச்சில் எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவையில் இல்லாதவர்கள், நீதிமன்றத்தில் உள்ளவை குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று பேசியதை நீக்க வேண்டும் என தி.மு.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
“DON’T COME HERE… GET OUT!” தன்னை நோக்கி வந்த திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்திகேயனிடம் ஆவேசமான சபாநாயகர்!
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 8, 2026
CM Vijay | TVK | TN Assembly 2026 | JCD prabhakar | Udhayanidhi Stalin#NewsTamil24x7 #DMKmla pic.twitter.com/FxZ9HUp2Xs