×

‘வேண்டும் வேண்டும் சரக்கு வேண்டும்….’ போராட்டம் நடத்தியவர்களை அரசு வாகனத்தில் டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள்!

கடையை திறந்து உடனே பாட்டில் கொடுங்கள் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று திடீரென்று டாஸ்மாக் ஒன்று திறக்கப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு டாஸ்மாக் திறக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். ஆனால் மற்றொரு புறம் டாஸ்மாக் திறப்பை கேள்விப்பட்டு குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அவர்கள் கடையை திறந்து உடனே பாட்டில் கொடுங்கள் என கோஷமிட்டனர். இதனால்
 

கடையை திறந்து உடனே பாட்டில் கொடுங்கள் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று திடீரென்று டாஸ்மாக் ஒன்று திறக்கப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு டாஸ்மாக் திறக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். ஆனால்  மற்றொரு புறம் டாஸ்மாக்  திறப்பை கேள்விப்பட்டு குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அவர்கள் கடையை திறந்து உடனே பாட்டில் கொடுங்கள் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் தற்போது திறக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்த நிலையில் அங்கிருந்தவர்கள் கலைந்து  சென்றனர்.

ஆனால்  குடிமகன்களோ  வேண்டும் வேண்டும் குடிப்பதற்கு மது வேண்டும் என்று கோஷமிட்டு  வந்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த வேறு வழி இல்லாத அதிகாரிகள்,  தங்கள் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு வேறு டாஸ்மாக் கடையில் கொண்டு சென்று விட்டனர்.   அரசு வாகனத்தில் டாஸ்மாக் சென்றவர்களைக் கண்டு அப்பகுதிவாசிகள் மலைத்துப்போய்  நின்றனர்.