×

‘வெங்காயமா திருடுற’… வெங்காயம் திருடிய நபரைக் கட்டி வைத்து அடித்து உதைத்த வியாபாரிகள் !

சந்தைகளில் இருந்து மூட்டை மூட்டைகளாக வெங்காயங்களைத் திருடிச் சென்று அதிக விலைக்கு விற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் பெய்த கனமழையின் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெங்காய வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை வரவழைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. வெங்காய விலை உயர்வு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், திருட்டுகளும் அதிகமாகி வருகின்றன. சந்தைகளில் இருந்து மூட்டை மூட்டைகளாக வெங்காயங்களைத் திருடிச் சென்று அதிக விலைக்கு விற்று
 

சந்தைகளில் இருந்து மூட்டை மூட்டைகளாக வெங்காயங்களைத் திருடிச் சென்று அதிக விலைக்கு விற்று வருகின்றனர். 

கடந்த நவம்பர் மாதம் முதல் பெய்த கனமழையின் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெங்காய வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை வரவழைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. வெங்காய விலை உயர்வு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், திருட்டுகளும் அதிகமாகி வருகின்றன. சந்தைகளில் இருந்து மூட்டை மூட்டைகளாக வெங்காயங்களைத் திருடிச் சென்று அதிக விலைக்கு விற்று வருகின்றனர். 

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள குபேர் மார்க்கெட்டில் அடிக்கடி பூண்டு, வெங்காயம், மிளகு உள்ளிட்டவை தொடர்ந்து திருடு போகியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் நேற்று திருடர்களைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் பிளான் போட்டதை போலவே,  முத்தரையர் பாளையத்தைச் சேர்ந்த காந்திலால் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வெங்காயங்களைத் திருடுவதற்காக வந்துள்ளார். அவரை கையும் களவுமாகப் பிடித்த வியாபாரிகள் கட்டிப் போட்டு அடித்து உதைத்துள்ளனர். அடி தாங்க முடியாமல் அவர் தான் இத்தனை நாட்களாக வெங்காயம் திருடினார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின்னர், காந்திலாலை பெரிய கடை காவல் நிலையத்தில் வியாபாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.