×

‘பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கி தருவோம்’ : ‘ரூட் தல’ மாணவர்களின் கொட்டத்தை அடக்கிய சென்னை போலீஸ்!

சென்னை போலீசாரால் விசாரிக்கப்பட்ட ரூட் தல எனப்படும் மாணவர்கள் இனி தவறு செய்யமாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர் சென்னை: சென்னை போலீசாரால் விசாரிக்கப்பட்ட ‘ரூட் தல’ எனப்படும் மாணவர்கள் இனி தவறு செய்யமாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கம் சாலையில் பட்டாக்கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் போலீசார், சம்மந்தப்பட்ட நான்கு மாணவர்களைக் கைது செய்து விசாரித்து வந்தனர். அதில் பேருந்தில் ரகளையில்
 

சென்னை போலீசாரால் விசாரிக்கப்பட்ட ரூட் தல  எனப்படும் மாணவர்கள் இனி தவறு செய்யமாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்

சென்னை: சென்னை போலீசாரால் விசாரிக்கப்பட்ட ‘ரூட் தல’  எனப்படும் மாணவர்கள் இனி தவறு செய்யமாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கம் சாலையில் பட்டாக்கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் போலீசார், சம்மந்தப்பட்ட நான்கு  மாணவர்களைக் கைது செய்து விசாரித்து வந்தனர். அதில் பேருந்தில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்குப் பக்கபலமாக ரூட் தல இருப்பது தெரியவந்தது. அதாவது பேருந்தில் வரும் மாணவர்களுக்குக் கல்லூரி சீனியர் ஒருவர் ‘ரூட் தல’யா  இருக்கிறார். இப்படி சென்னையில் மட்டும் 90 ரூட் தலைகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர்களிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீசார் ‘ரூட் தல’ மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் ‘ரூட் தல’ மாணவர்கள்  போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதில், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட மாட்டோம். பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கி தருவோம். இதை மீறினால் சட்டப்படியான நடவடிக்கைக்குக் கட்டுப்படுவோம்’ என்று கூறினர். சமீபகாலமாகக்  கல்லூரி மாணவர்கள்  பொதுமக்களுக்கு இடையூறு தரும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் சென்னை  காவல்துறை அவர்களை அழைத்து அறிவுரை வழங்குவதுடன் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு தொடர் முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.