×

‘பார்பி பொம்மை’ சந்தையில் அறிமுகம்..! பார்வை அற்ற குழந்தைகளுக்காக...

 

மேட்டல் நிறுவனம் தற்போது பார்வை மாற்றுத்திறன் கொண்ட பார்பி பொம்மையை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் பார்பி பொம்மைகளின் உலகம் மேலும் விரிவடைந்துள்ளது.  பார்வை மாற்றுத்திறனுடன் பார்பி பொம்மை வெளிவந்துள்ளது இதுவே முதல் முறை. இதற்காக பார்வை மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து இயங்கி வரும் அமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளது மேட்டல்.

1959-ம் ஆண்டு பார்பி பொம்மை அறிமுகமானது. தொடர்ந்து பார்பி மொம்மைகள் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. தற்போது அறிமுகமாகியுள்ள பார்வை மாற்றுத்திறனாளி பார்பி பொம்மையானது, வெள்ளை மற்றும் சிவப்பு கைத்தடியைப் பிடித்தவாறு இருக்கிறது. அதன் கருவிழிகள் சற்று மேலே பார்த்தபடி, பார்வைத் திறனில்லை என்பதை உணர்த்தும் வகையில் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேட்டல் நிறுவனம் இதற்கு முன் 2022-ம் ஆண்டு காது கேளாதவருக்கான பார்பிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியுடன் பார்பி பொம்மைகளை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.