×

‘நயன்தாரா டீ, ஹன்சிகா போண்டா, தமன்னா வடை’.. இணையதளத்தில் ட்ரெண்டாகும் டீக்கடை!

மக்களின் கவனத்தை ஈர்க்க டீக்கடைக்காரர் வைத்த பேனர் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சோஷியல் மீடியாக்கள் புழக்கத்தில் வந்ததில் இருந்தே குழந்தைகளின் வீடியோக்கள், விலங்குகளின் சேட்டைகள், காமெடிகள் போன்ற பல வீடியோக்களும் போட்டோக்களும் இணைய தளத்தை கலக்கி வருகின்றன. குறிப்பாக மக்களின் கவனத்தை ஈர்க்க கடைக்காரர்கள் வைக்கும் குசும்புத் தனமான பேனர்கள் கூட அவ்வப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. வழக்கமாக தனது கடையை வைக்க பெரும்பாலான கடை ஓனர்கள், பிரபல நடிகைகளின் புகைப்படங்களை பயன்படுத்தி விளம்பரப்படுத்துவது வழக்கம்.
 

மக்களின் கவனத்தை ஈர்க்க டீக்கடைக்காரர் வைத்த பேனர் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சோஷியல் மீடியாக்கள் புழக்கத்தில் வந்ததில் இருந்தே குழந்தைகளின் வீடியோக்கள், விலங்குகளின் சேட்டைகள், காமெடிகள் போன்ற பல வீடியோக்களும் போட்டோக்களும் இணைய தளத்தை கலக்கி வருகின்றன. குறிப்பாக மக்களின் கவனத்தை ஈர்க்க கடைக்காரர்கள் வைக்கும் குசும்புத் தனமான பேனர்கள் கூட அவ்வப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வழக்கமாக தனது கடையை வைக்க பெரும்பாலான கடை ஓனர்கள், பிரபல நடிகைகளின் புகைப்படங்களை பயன்படுத்தி விளம்பரப்படுத்துவது வழக்கம். அதே போல ஹோட்டல்களுக்கு நடிகை பெயர்களை வைப்பது, கடை முழுவதும் நடிகைகளின் போட்டோக்களை ஒட்டி வைப்பது போன்றவை எல்லாம் மக்களுக்கு பழகிப்போன விஷயம் தான். இந்த நிலையில், ஒரு டீக்கடைக்காரர் தனது கடையை பிரபலப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்க சிறியதாக பேனர் ஒன்றை வைத்துள்ளார். அந்த பேனரில் டீக்கடையில் விற்கப்படும் பொருட்களின் விலைபட்டியலை குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால். எல்லா உணவுக்கும் அவர் பிரபல நடிகைகள் பெயரை வைத்துள்ளார். அதாவது, ‘ நயன்தாரா டீ, தமன்னா வடை, ஹன்சிகா போண்டா.. எல்லாமே ரூ.5 தான்’ என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ட்ரெண்டாகி வரும் அந்த பேனருக்கு பலரும் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.