×

‘திருநங்கை’ என்ற சொல்லுக்கு பதிலாக இனி வேறு சொல்: தமிழக அரசு உத்தரவு!

மூன்றாம் பாலினத்தவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமூகத்தில் பெயர் அளவில் கூட பல இன்னல்களைச் சந்தித்து வரும் மூன்றாம் பாலினத்தவர்களைத் திருநங்கைகள் என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதற்குப் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்த வார்த்தை தான் தற்போது புழக்கத்திலிருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு திருநங்கை என்ற வார்த்தையை மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சமூகநலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிமேல்
 

மூன்றாம் பாலினத்தவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமூகத்தில் பெயர் அளவில் கூட பல இன்னல்களைச் சந்தித்து வரும் மூன்றாம் பாலினத்தவர்களைத் திருநங்கைகள் என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.  இதற்குப் பலத்த வரவேற்பு கிடைத்தது.  இந்த வார்த்தை தான் தற்போது புழக்கத்திலிருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு திருநங்கை என்ற வார்த்தையை மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சமூகநலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இனிமேல் திருநங்கை என்ற வார்த்தைக்கு மாற்றாக  மூன்றாம் பாலினத்தவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதுவரை தமிழக அரசு அரசு ஆணைகள் மற்றும் அறிக்கைகளில் மூன்றாம் பாலினத்தவரைக் குறிப்பிடும் போது, திருநங்கைகள் என்றே குறிப்பிட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.