×

‘ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்தது உண்மை!’ – புதிய பரபரப்பை கிளப்பும் காவல் அதிகாரி!

2010-ம் ஆண்டில் ஜெயலலிதாவை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாக நம்மிடம் பேசிய துப்பறியும் நிபுணர் வரதராஜன் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். சென்னை: 2010-ம் ஆண்டில் ஜெயலலிதாவை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாக நம்மிடம் பேசிய துப்பறியும் நிபுணர் வரதராஜன் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் 25 வருடங்கள் பணிபுரிந்துவிட்டு, விருப்ப ஓய்வு பெற்றவர் வரதராஜன். இவர் தற்போது சென்னை செனாய் நகரில் தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 

2010-ம் ஆண்டில் ஜெயலலிதாவை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாக நம்மிடம் பேசிய துப்பறியும் நிபுணர் வரதராஜன் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை: 2010-ம் ஆண்டில் ஜெயலலிதாவை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாக நம்மிடம் பேசிய துப்பறியும் நிபுணர் வரதராஜன் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழக காவல் துறையில் 25 வருடங்கள் பணிபுரிந்துவிட்டு, விருப்ப ஓய்வு பெற்றவர் வரதராஜன். இவர் தற்போது சென்னை செனாய் நகரில் தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதாவுடன் தனக்கு நேர்ந்த அனுபவங்களை நம்மிடம் பிரத்தியேகமாக விவரித்த இவர், இதுவரை வெளிவராத பல ரகசியங்களையும், ஜெயலலிதாவின் உயிருக்கு இருந்த ஆபத்தையும் விரிவாக விளக்கியுள்ளார். 

அவர் கூறுகையில், “2010-ல் ஜெயலலிதா எந்த அரசுப் பதவியிலும் இல்லை. அவரது போயஸ்கார்டன் வீட்டில் அமைதியாக காலங்கழித்து வந்தார். திடீரென ஒரு நாள்.. என்னுடைய அலுவலக எண்ணிற்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் அ.தி.மு.க. தலைமைக்கழக பொறுப்பாளர் மகாலிங்கம் பேசினார்.  `உங்களை அம்மா அழைக்கிறார். உடனே வாருங்கள்’ என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நேரில் சென்றேன். `எனக்காக ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். முடியுமா?’ என்று கேட்டார். நானும் நிச்சியமாகச் செய்கிறேன் என்றேன்.

அப்போது அவர் என்னிடம் `நான் இரவில் படுக்கப்போகும்முன் பால் குடிப்பேன். அதுபோலத்தான், இந்த டம்ளரைக் கையில் எடுத்தேன். முகத்தருகே கொண்டு சென்றபோது, பயங்கர அதிர்ச்சி. பாலில் இருந்து ஏதோ புதுவித வாடை வந்தது. வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட மூட்டு வலி தைலத்தின் வாடை என்பதைப் புரிந்துகொண்டேன். உடனே, அந்த தைல பாட்டிலை எடுத்துப் பத்திரப்படுத்தினேன். அதில் ஏதாவது விரல்ரேகை இருக்கிறதா? என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் ‘ என்றார்.  

நானும் உடனடியாக தடய அறிவியல் கருவிகளை வரவழைத்து பாட்டிலின் வெளிப்புறம் பதிந்திருந்த விரல் ரேகைகளைப் பதிவு செய்தேன். அதேநேரம், அவரது அறைக்கு அடிக்கடி சென்று வரும் சின்ன வயதுக்காரர்களான நான்கு பணியாட்களின் விரல்ரேகை பதிவுகளை ஜெயலலிதா என்னிடம் கொடுத்தார். இவர்களின் விரல்ரேகைகளுடன் அந்த தைலப் பாட்டிலில் இருந்த ரேகையும் ஒத்துப்போகிறதா? என்று பார்த்துச் சொல்லுங்கள் என்றார்.  

இதை நான் செய்ய லேப்புக்கு செல்ல வேண்டும். விரல் ரேகைகளை எடுத்துச் செல்லட்டுமா? என்று கேட்டேன். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மறுத்தார். ஆனாலும், அவரையும் மீறி என்னை வெளியே எடுத்துச் செல்ல ஜெயலலிதா அனுமதித்தார். நானும் சின்ஸியராக செக்கப் பண்ணினேன். ரிசல்ட்டை சொன்னேன். ஜெயலலிதா சந்தேகப்பட்ட நான்கு நபர்களின் விரல் ரேகைகளுடன் அது ஒத்துப்போகவில்லை என்றேன். அதைக்கேட்ட ஜெயலலிதா, சற்று யோசித்தார். ‘ஒ.கே. இதை இதோடு விட்டுவிடுங்கள்’ என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் இந்த சூழலில், வரதராஜன் வெளியிட்டு தகவல்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நம்மிடம் வரதராஜன் வழங்கிய பேட்டியின் முழு வீடியோ: